கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
