புத்தளம் மாவட்டத்தின் முந்தல் (Mundalama) பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவில், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்கள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளநீர் பெருக்கில் இந்த மாணவர்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளநீர் பெருக்கெடுத்த பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இரு மாணவர்களின் உடல்களும் வெள்ளப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இந்த விபரீத நிகழ்வு காரணமாக முந்தல் பிரதேச மக்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
