Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

உயிரிழப்பு 366 ஆக உயர்வு!

டித்வா புயலின் (DITWA Cyclone) தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 366 ஆக உயர்ந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre – DMC) இன்று (01) மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த அனர்த்தங்களில் 367 பேரை இன்னும் காணவில்லை எனவும், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை 9 மணிக்கு வெளியான அறிக்கையில் 355 மரணங்களும், 366 காணாமல் போனவர்களும் பதிவாகியிருந்த நிலையில், இந்தச் சமீபத்திய தகவல்கள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை