நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவின் மூன்று பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால், அதற்குத் தடை விதிக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அப்படத்தில் அந்தப் பாடல்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மீறி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததாக இளையராஜா குற்றம்சாட்டினார்.
நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கப்படாமல் இருந்தது.
எனவே, தனது பாடலை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா தயாரிப்பு நிறுவனத்துக்கு அண்மையில் நோடீஸ் அனுப்பினார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
