தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா, ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சிறப்பாக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தி தனித்துவ குரல் வளத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் தேவா. அவரின் நீண்டகால இசைப் பயணத்தை பாராட்டி, ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் சிறப்பு கவுரவம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் அமரவும், மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.
இந்த அரிய மரியாதையை பெற்ற தேவா நெகிழ்ச்சியடைந்த நிலையில், “ஆஸ்திரேலிய அரசுக்கும் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையத்திற்கும் மனமார்ந்த நன்றி. இது எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் சொந்தமான அங்கீகாரம். என் 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும் ஆதரவுமே என் பலம்” என தெரிவித்துள்ளார்.
