Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

💔 விஜய் கொடுத்த இன்னொரு உறுதிமொழி!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடத்திய பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல்குமார் ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரும் முன்னெச்சரிக்கை ஜாமீன் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விஜயின் பதில் நடவடிக்கைகள்:
இந்தத் துயர சம்பவத்தின் பின்னர், விஜய் உருக்கமான வீடியோ வெளியிட்டு, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். உயிரிழந்த குடும்பங்களை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

நேற்று மாலை 4.30 மணியளவில், விஜய் தனுஷ்குமார் என்ற உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அவரது தாயாரும், தங்கை ஹர்ஷினியும் வீடியோ அழைப்பில் பங்கேற்றனர்.

விஜய் கூறியது:

“நடக்கக்கூடாத நிகழ்வு நடந்து விட்டது. இந்த இழப்புக்கு ஈடு இல்லை. உங்கள் குடும்பத்துக்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன். விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன்.”

தனுஷ்குமாரின் தங்கை ஹர்ஷினியிடம் விஜய்,

“ஒரு அண்ணனாக உங்களுக்காக இருக்கப்போகிறேன். உங்களை நேரில் சந்திக்க நிச்சயம் வருகிறேன்” என்றும் உருக்கமாக தெரிவித்தார்.

வீடியோ அழைப்பின் போது சுமார் 20 நிமிடங்கள் குடும்பத்தினருடன் விஜய் உரையாடியதாகவும், இந்த தகவலை உறவினரான தமிழரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் பலியானோர் மற்ற குடும்பத்தினருடனும் விஜய் விரைவில் வீடியோ மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் ஆறுதல் வழங்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை