Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி தாழிறங்கியது!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் அமைந்துள்ள நானுஓயா எடிம்புரோ (Nanuoya Edimbrough) பகுதியில் முழு வீதியும் தாழிறங்கியுள்ளதால், குறித்த பகுதியின் போக்குவரத்துத் தற்காலிகமாக முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையின் தொடர்ச்சியான தாக்கமே இந்த வீதித் தாழிறக்கத்திற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

எனினும், அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு, ஒருவழிப் போக்குவரத்து வசதிக்காக வீதியைச் சீரமைக்கும் மற்றும் செப்பனிடும் பணிகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் ஒருவழிப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை