கலஹா (Galaha) தெல்தோட்ட (Deltota) லூல்கந்துர (Loolkandura) பிரிவின் அப்பகொனவ (Appakonawa) பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மீதியுள்ள மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில், அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
இந்தச் சம்பவத்தின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மீட்கப்பட்ட 8 சடலங்களும் அப் பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே மீட்கப்பட்டு, உடனடியாக இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ மீட்புக் குழுக்கள் சிரமங்களுக்கு மத்தியில் மீட்புப் பணிகளை முன்னெடுத்துவரும் நிலையில், மக்களின் இந்த அவசரச் செயற்பாடு அனர்த்தத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.
