கடந்த நவம்பர் 25 ஆம் திகதி முதல் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை (Driving Licenses) புதுப்பித்துக் கொள்வதற்காக, ஒரு மாத காலச் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் அனர்த்த நிலை காரணமாகப் பலரும் தமது சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், இந்த ஒரு மாத காலச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த காலப்பகுதியில் காலாவதியான அனுமதிப் பத்திரங்களைக் கொண்டவர்கள், போக்குவரத்துச் சட்ட சிக்கல்கள் இன்றி அவற்றை உரிய முறையில் புதுப்பித்துக் கொள்ள இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
