கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்களின் விளைவாக இதுவரை 19 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த அனர்த்தத்தில் சிக்கி 44 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், ஏனைய அனைத்து மக்களும் பாதுகாப்பான முகாம்கள் மற்றும் உயரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், யாரும் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் பிரதேச செயலாளர் பொதுமக்களுக்குக் கேட்டுக்கொண்டுள்ளார்.
