Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

💔 நுவரெலியாவில் பேரழிவு – 75 பேர் பலி, 62 பேர் மாயம்

சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயலின் தாக்கம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலையால் மாவட்டத்தில் மொத்தமாக 2,691 குடும்பங்களைச் சேர்ந்த 12,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில், 1,914 குடும்பங்களைச் சேர்ந்த 8,654 பேர், பாதுகாப்பான 61 தற்காலிகத் தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அவர்கள் இது குறித்துத் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள், உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் தாங்கள் உள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நுவரெலியா நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் நிலைமை சீராகும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை