சீரற்ற வானிலை காரணமாக வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், இந்தியா தனது மூன்றாவது போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுகன்யா (INS Sukanya)-வை நிவாரணப் பொருட்களுடன் அனுப்பி வைத்துள்ளது.

இந்திய கடற்படையைச் சேர்ந்த இந்தக் கப்பல், இலங்கையின் அத்தியாவசியத் தேவைகளுக்கான பாரிய நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்துள்ளது. முன்னதாக, ஐஎன்எஸ் சுமித்ரா மற்றும் ஐஎன்எஸ் கிரீச் ஆகிய இரண்டு இந்திய போர்க்கப்பல்கள் ஏற்கனவே உதவிகளை வழங்கியிருந்தன.
இந்தியா அனுப்பியுள்ள இந்தக் கப்பல், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
