‘டித்வா’ புயலின் நகர்வு மற்றும் அதன் தீவிரம் குறித்து இந்திய வானிலை அவதானிப்பு நிலையங்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளன. இலங்கையில் பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்திய இந்தப் புயல், தற்போது இந்தியக் கரையோரப் பகுதிகளை நோக்கி நகர்வதால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயலின் நகர்வு மற்றும் இருப்பிடம்:
-
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டித்வா’ புயல், வடக்கு – வடமேற்கு திசையில் நகரும் வேகம் மணிக்கு 8 கி.மீ. ஆகச் சற்று அதிகரித்துள்ளது.
-
தற்போதைய நிலவரப்படி, புயல் மையம் சென்னைக்குத் தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
-
மேலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் இந்தப் புயல் நிலை கொண்டுள்ளது.
மழைவீழ்ச்சி:
-
‘டித்வா’ புயல் காரணமாகத் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் உட்படக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
புயல் கரையை நெருங்கும் பட்சத்தில், இந்தப் பகுதிகளில் மழை மற்றும் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
