இந்திய சினிமாவின் திரை பிரபலங்கள், திரைப்படங்களின் வசூலைவிடவும், சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தேடல்களில் அடிப்படையாகப் பெறும் புகழின் அளவுகளால் மதிப்பீடு செய்யப்படுகின்றனர்.
அந்தவகையில், கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றிய பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல முன்னணி பாலிவுட் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதலிடம் பிடித்துள்ளார். ஷாருக்கான், சல்மான் கான், விஜய், பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
தொடர்ந்து, ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான் கான், அமீர் கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தென்னிந்திய திரை பிரபலர்களில்,
-
சமந்தா 13வது இடத்தில்,
-
தமன்னா 16வது இடத்தில்,
-
நயன்தாரா 18வது இடத்தில்,
-
பிரபாஸ் 29வது இடத்தில்,
-
தனுஷ் 30வது இடத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இது தவிர மற்ற தமிழ் நடிகர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
