தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் அஜித்குமார். குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அவர் தனது கவனத்தை முழுமையாக கார் ரேசிங்கில் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு முதல் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிறுவனம் துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்று பல விருதுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், அஜித்குமார் தற்போது ஸ்பெயினில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். குறிப்பாக இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள Creventic 24H பந்தயத்தில் அவர் தனது அணியுடன் கலந்துகொள்ளவுள்ளார்.
