Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

யாழ்ப்பாணத்தின் அடையாளம் வீழ்ந்தது!

யாழ்ப்பாணத்தில் இன்று (17) பெய்த கனமழை காரணமாக, யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனின் வரலாற்றுச் சின்னமான மந்திரி மனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

நல்லூரில் உள்ள சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கட்டடம், ஏற்கனவே இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன.

அந்தக் கம்பிகள் சமீபத்தில் திருடு போன நிலையில், இன்று பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை