Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

2 வயது சிறுமி தெய்வமாக உயர்வு!

நேபாளத்தின் தலேஜு பவானி கோவிலில், 2 முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் தெய்வமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
இவர்களே குமாரி என அழைக்கப்படுகின்றனர்.

குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர்களின் மனமும் உடலும் வலிமையானதாக இருக்க வேண்டும்.
இறுதியில், சிறுமியின் முன் எருமை பலியிடப்படும்.
அதைக் கண்டு அஞ்சாமல் நிற்கும் சிறுமியே குமாரியாக தேர்ந்தெடுக்கப்படுவாள்.

குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்தச் சிறுமி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும்.
அரண்மனைக் கோவிலுக்குள் தங்கி, கல்வியும் தனிப்பட்ட முறையில் கற்பிக்கப்படும்.

ஆண்டு முழுவதும் அவர் 13 முறை மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுவார்.
அவருடைய கால்கள் தரையைத் தொடுவது பாவமாகக் கருதப்படுவதால் எப்போதும் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் செல்லப்படுவார்.

ஒரு நாள் பருவமடைந்தவுடன், அவர் சாதாரண மனிதராகக் கருதப்படுகிறார்.
பின்னர் அரசு அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கும்.

ஆனால், “முன்னாள் குமாரியை மணந்தவர் விரைவில் இறந்து விடுவார்” என்ற பழமையான நம்பிக்கையால், பெரும்பாலான முன்னாள் குமாரிகள் திருமணம் செய்யாமல் வாழ்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை