உலகளாவிய சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. சர்வதேச சந்தைத் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உயர்வின் தாக்கம் இலங்கையிலும் தெளிவாகக் காணப்படுகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் ரூ.8,000 வரை அதிகரித்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு செட்டியார் தெருவில் பதிவான இன்றைய விலை (அக்டோபர் 7):
| தரம் | கடந்த வெள்ளி விலை | இன்றைய விலை | விலை மாற்றம் |
|---|---|---|---|
| 22 கரட் (பவுண்) | ரூ.283,000 | ரூ.290,500 | ரூ.7,500 அதிகரிப்பு |
| 24 கரட் (பவுண்) | ரூ.306,000 | ரூ.314,000 | ரூ.8,000 அதிகரிப்பு |
இவ்வாறு ஏற்பட்ட திடீர் விலை உயர்வினால், தங்கம் வாங்குவோர் மற்றும் விற்பனை செய்யும் வணிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேலும் விலை ஏறக்கூடிய வாய்ப்பு இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்களது அக்கறையை அதிகரித்து வருகிறார்கள்.
