Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

பிலிப்பைன்ஸில் பேரதிர்ச்சி – சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மின்டானோவ் (Mindanao) நகரில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கமானது 62 கி.மீ. (38.53 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டு நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் பீதி: உயரமான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

நிலநடுக்கத்தின் காரணமாகக் கட்டிடங்கள் கடுமையாக அதிர்ந்தன. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

மீண்டும் நிலநடுக்கம்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம், செபு நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 74 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பிலிப்பைன்ஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபரம் குறித்து மேலதிகத் தகவல் கிடைத்தால் உடனுக்குடன் இங்கு பகிரப்படும்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை