Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

ஃபேஸ்புக்கில் இனி வேலையும் கிடைக்கும்!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த, ஆனால் பின்னர் இடைநிறுத்தப்பட்ட, வேலைவாய்ப்புகளைக் கண்டறியும் அம்சத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்டா நிறுவனம் இந்தச் சேவையை முதன்முதலில் 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. எனினும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் இது நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், பயனர்களின் தேவைக்காக இந்த அம்சத்தை மீண்டும் அறிமுகப்படுத்த மெட்டா தீர்மானித்துள்ளது. இந்த புதிய அம்சத்தை, ஃபேஸ்புக்கின் ‘Marketplace’ பிரிவில் பார்வையிட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை