Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

OTP மோசடி வலையில் சிக்கிய நால்வர்!

கடந்த மே 29, 2024 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) வடமேல் மாகாண கணினி குற்றப்பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து ரூ. 5,69,610 மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நால்வர் நேற்று (அக்டோபர் 14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 38 வயதுடைய தெஹிதெனிய மற்றும் முருதலாவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நீர் மோட்டார் ஒன்றை வாங்குவதாகக் கூறி, அதற்காக முன்பணம் செலுத்துவதாக விற்பனையாளரை நம்ப வைத்துள்ளனர். பின்னர், விற்பனையாளரின் வங்கிக் கணக்கின் OTP இலக்கத்தைப் பெற்று, அதன் மூலம் பணத்தை மோசடி செய்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பண மோசடி, தவறான பயன்பாடு மற்றும் நம்பிக்கைக்குப் புறம்பாக நடந்துகொள்ளல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஒருவரும், அவருக்கு உதவிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (அக்டோபர் 15) வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை