நாட்டில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்துத் தரப்பினரும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர். இந்த மனிதாபிமானச் சங்கிலியில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியும் இணைந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இன்று விடுத்துள்ள அறிவிப்பில், அடுத்து வரவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டித் தொடரில் (Pakistan Cricket Series) இருந்து அணிக்குக் கிட்டும் வருவாயின் ஒரு பகுதியை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றப் பணிகளுக்காக வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்குச் சிறிது ஆறுதல் அளிக்கும் வகையில் கிரிக்கெட் வீரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், நாட்டின் இந்த இக்கட்டான நேரத்தில் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்த நடவடிக்கை வலியுறுத்துகிறது.
இந்த நிதி, அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் ஊடாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாகச் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
