நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 11 மாவட்டங்களைச் சேர்ந்த 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.
குறிப்பாக, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா போன்ற மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான உடனடி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔴 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள முக்கிய மாவட்டங்கள் மற்றும் பிரிவுகள்:
-
பதுளை: ஊவ பரணகம, ஹப்புத்தளை, பண்டாரவளை, ஹாலிஎல, பதுளை, லுணுகல, பசறை, மீகஹகிவுல, சொரணத்தோட்டை, வெலிமடை, எல்ல, கந்தகெட்டிய, ஹல்துமுல்ல.
-
கண்டி: பன்வில, பாததும்பர, கங்க இஹல கோரளை, உடுநுவர, தொழுவ, பூஜாபிட்டிய, மினிப்பே, கங்கவட்ட கோரளை, அக்குறணை, பஸ்பாகே கோரளை, ஹதரலியத்த, ஹாரிஸ்பத்துவ, பாதஹேவாஹெட்ட, உடுதும்பர, தும்பனே, உடுப்பலாத, குண்டசாலை, யட்டிநுவர, தெல்தோட்டை, மெததும்பர.
-
கேகாலை: ரம்புக்கனை, மாவனல்லை, தெரணியகல, யட்டியாந்தோட்டை, கலிகமுவ, வரகாபொல, ருவான்வெல்ல, அரநாயக்க, கேகாலை, புளத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட.
-
இரத்தினபுரி: கலவான, குருவிட்ட, கொடகவெல, அயகம, எலபாத்த, கஹவத்தை, ஓப்பநாயக்க, கொலன்ன, நிவித்திகல, பலாங்கொடை, இம்புல்பே, பெல்மடுல்ல, கிரியெல்ல, இரத்தினபுரி, எஹலியகொடை.
-
நுவரெலியா: ஹங்குரான்கெத்த, மதுரட்ட, நுவரெலியா, கிழக்கு கொத்மலை, மேற்கு கொத்மலை, தலவாக்கலை, நோர்வுட், அம்பகமுவ, நிள்தண்டாஹின்ன, வலப்பனை.
-
மாத்தளை: வில்கமுவ, அம்பங்கங்க கோரள, பல்லேபொல, உக்குவளை, நாவுல, லக்கல-பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை, மாத்தளை.
-
குருநாகல்: பொல்கஹவெல, அலவ்வ, நாரம்மல, மாவத்தகம, மல்லவப்பிட்டிய, ரிதிகம.
-
மொனராகலை: பிபிலை, மெதகொட.
-
கொழும்பு: சீதாவக்க, பாதுக்கை.
-
கம்பஹா: அத்தனகல்ல.
இவற்றுடன், களுத்துறை, காலி, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும், கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களின் 31 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாகவும், அவசரமாகவும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
