Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

இவள் மனதளவில் கோடீஸ்வரி!

வெலிகமப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நன்கொடைகள் சேகரிக்கப்பட்ட போது, ஓர் அரிய தாயின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு வந்த ஒரு தாய், தன்னால் முடிந்த உதவியாக, இரண்டு பனடோல் மாத்திரைத் தாள்களை (கார்டுகளை) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அந்தப் பாட்டி வழங்கிய இரண்டும் சேர்ந்து நூறு ரூபாய்க்குக் கூட வராது. நூறு ரூபாய்க்குள் தான் தன்னால் நிவாரணம் வழங்க முடியுமாக இருந்தால், அத்தாயின் கையிருப்பு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் கூட இருந்திருக்காது. ஆனாலும் அவள் மனதளவில் கோடீஸ்வரி.

இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்த தன்னார்வலர்கள், “இறைவன் நாம் உதவுகிறோமா என்றுதான் பார்க்கிறான். எவ்வளவு கொடுக்கிறோம் என்று பார்ப்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், “ஆனால் கோடி கோடியாகப் பணம் வைத்திருக்கும் நிறைய பேர் எதுவித உதவியும் செய்ய மனம் வராமல் இருக்கின்றார்கள். உண்மையில் யார்தான் பிச்சைக்காரர்கள்?” என்று கேள்வி எழுப்பி, மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.

நம் நாட்டு மக்கள் அற்புதமானவர்கள். நாம் ஒருவரையொருவர் நேசிப்போம். இந்த அனர்த்த காலத்தில் ஒருவருக்கொருவர் உதவுவோம் என்று அவர்கள் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை