இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 29 அன்று 2000 ரூபாய் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது.
புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் எளிதாக்கும் வகையில், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் தங்கள் பணம் கையாளும் இயந்திரங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த பணியின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் படிப்படியாக புழக்கத்திற்கு வரும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


