ஹரியானாவைச் சேர்ந்த 19 வயதான ஜிதின் ராவ், இந்தியாவின் இளம் வயது மில்லியனர் மற்றும் லம்போர்கினி கார் வாங்கிய இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பெரும்பாலான இளைஞர்கள் பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்தும் 13 வயதிலேயே, இவர் பங்குச் சந்தை மற்றும் வர்த்தகம் (டிரேடிங்) குறித்த நுட்பங்களைக் கற்றுக்கொண்டுள்ளார்.
தனது SJ2 என்ற யூடியூப் சேனல் மூலம் பங்குச் சந்தை வர்த்தகம் செய்வது குறித்துப் பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். வர்த்தகம் மூலம் பணம் ஈட்டத் தொடங்கிய ஜிதின் ராவ், தனது 17 வயதிலேயே இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் ஆனார். தற்போது, தனது 19 வயதில், சொந்த சம்பாத்தியத்தில் லம்போர்கினி காரை வாங்கியுள்ளார்.
ஜிதின் ராவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் இள வயது சுயசம்பாத்திய மில்லியனர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
சரியான திட்டமிடல் மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால், பணம் சம்பாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை ஜிதின் ராவ் நிரூபித்துள்ளார்.
