Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

24 வயதிலேயே ரூ.250 கோடி சொத்திற்கு அதிபதி!

பாலிவுட் டி.வி. நடிகை ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி, 24 வயதிலேயே ரூ. 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் அதிபரானார் என்ற செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தைத் தொடங்கிய ஜன்னத், இன்று முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். ‘தில் மில்கே’, ‘காசி: அப் நா ராஹே தேரா கக்கா கோரா’, ‘புல்வா’ போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.

அத்துடன், ‘பியர் பேக்டர்’ உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார். மேலும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு ரூ.2 லட்சமும், சமூக ஊடகங்களில் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரையிலும் வருமானம் ஈட்டிவருகிறார்.

நடிப்பு துறையைத் தாண்டி ரியல் எஸ்டேட், ஜவுளித் தொழில் ஆகிய துறைகளிலும் முதலீடு செய்து தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். இவரது சொத்தின் நிகர மதிப்பு ரூ.250 கோடி என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை