Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

மக்களுக்கு உதவ ஜிப்லைனில் சென்ற டொக்டர்!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழையினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்த சோகமான சூழலில், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவச் சென்ற அரசு மருத்துவர் இர்பான் மோல்லாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நிலச்சரிவில் தவித்த மக்கள்

டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட சிலர், நீர் சூழ்ந்த ஒரு பகுதியில் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவரான இர்பான் மோல்லா விரைந்தார்.

ஆனால், வெள்ளநீர் சூழ்ந்திருந்ததால் அவரால் பாதிக்கப்பட்ட இடத்திற்குச் செல்ல முடியவில்லை.

ஜிப்லைனில் துணிச்சலான பயணம்

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று முடிவெடுத்த டாக்டர் இர்பான், ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி ஜிப்லைன் (Zip Line) போன்று அமைத்து, அதன் வழியே துணிச்சலாக ஊர்ந்து சென்றார்.
அங்குச் சென்ற அவர், காயமடைந்திருந்த மக்களுக்கு உடனடியாக மருத்துவம் செய்தார்.

காணொளி – https://www.facebook.com/share/v/1BVHyAGcu2/

தனது உயிரைத் துச்சமென மதித்து, இந்த ஆபத்தான முறையில் ஜிப்லைனில் சென்று மருத்துவம் பார்த்த டொக்டர் இர்பானின் செயல்பாடு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதாபிமானத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய இந்த வீரமிக்க மருத்துவருக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை