மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில், பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நீலேஷ் பில்லாலா (25) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஏப்ரல் 18, 2024 அன்று கக்னர் சமூக சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறையில் நடந்துள்ளது. சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் மாதத்தில் மருத்துவமனை ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் இந்தச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகள் மிகவும் பயங்கரமாக உள்ளன:
* குற்றம் சாட்டப்பட்ட பில்லாலா நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை மையத்திற்குள் நுழைந்துள்ளார்.* சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, கேமராவின் பார்வையில் படாத ஒரு மூலைக்குக் கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
* அதன் பிறகு சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ அதிகாரி டாக்டர் ஆதியா தாவர் கடந்த அக்டோபர் 7, 2025 அன்று அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து நீலேஷ் பில்லாலாவைக் கைது செய்தனர். அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் செயல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
