Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

இனி இந்திய ரூபாயில் கடன் வாங்கலாம்!

இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய அண்டை நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்நியச் செலாவணி முகாமைத்துவ விதிகளில் முக்கிய திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள “அந்நியச் செலாவணி முகாமைத்துவ (கடன் பெறுதல் மற்றும் கடன் வழங்குதல்) (திருத்தம்) விதிமுறைகள், 2025” என்ற புதிய அறிவிப்பின்படி, இந்திய வங்கிகள் (வெளிநாட்டுக் கிளைகள் உட்பட) மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளின் வங்கிகள் அல்லது தனிநபர்களுக்கு இந்திய ரூபாயில் (INR) கடன் வழங்க அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன்கள் எல்லை தாண்டிய வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்காக (cross-border trade transactions) மட்டுமே அனுமதிக்கப்படும்.

இந்த நடவடிக்கை இலங்கையில் உள்ள வணிகர்களுக்குக் கடன் பெறுதலை எளிதாக்குவதோடு, கடன்கள் இந்திய ரூபாயில் வழங்கப்படுவதால், அவர்கள் அந்நியச் செலாவணி மாற்று விகித இடர்களைக் (Forex Rate Risks) குறைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான நிதித் தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை