மேஷம்
மதியத்திற்கு பின் மனக்குழப்பம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். கொள்கைபிடிப்பு மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறு.
ரிஷபம்
ஒளிமயமான நாள். இல்லத்தில் நல்ல நிகழ்வுகள் நடக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி.
மிதுனம்
திடீர் பயணம் சிறப்பான செய்தி தரும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மாற்றினரின் ஒத்துழைப்பு கிட்டும்.
கடகம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இனிய செய்தி வந்து சேரும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறை பயன் தரும். திருமண பேச்சுகள் கைகூடும்.
சிம்மம்
வருமானம் உயரும். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு.
கன்னி
அமைதி பெற ஆலய பயணம் மேற்கொள்வீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி சம்பவம் நடக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
திறமை வெளிப்படும். வீடு, வாகன மாற்றம் சாத்தியம். தொழில் வளர்ச்சி உயரும். சிநேகிதர்கள் வழிகாட்டுவர்.
விருச்சிகம்
யோக நாள். வருமானம் அதிகரிக்கும். புகழ்பெற்றவர்களைச் சந்திப்பீர்கள். அரசியல் ஆதரவோடு நல்ல காரியம் நடக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.
தனுசு
வெற்றி செய்திகள் வந்து சேரும். செலவுகள் தவிர்க்க முடியாதது. தீயவர்கள் விலகுவர். சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும்.
மகரம்
மனமாற்றத்தால் மகிழ்ச்சி உண்டு. மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு. வியாபார விருத்தி கைகூடும். உடல்நலத்தில் கவனம் தேவை.
கும்பம்
உன்னத வாழ்க்கைக்கு அடித்தளம். பொதுவாழ்வில் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் சாத்தியம்.
மீனம்
நட்பு பகையாகும். கடமையில் தொய்வு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். யோசித்து செயல்படவும். தொழிலாளர் மேலாண்மையில் கவனம் தேவை.
