Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

உங்களுக்கு என்ன காத்திருக்கிறது?

இன்று (அக்டோபர் 15, 2025) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ராசி பலன்கள்
மேஷம் தடைகள் நீங்கி, தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. பணியிடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம் இடமாற்ற சிந்தனை மேலோங்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றம் குறித்து சக பணியாளர்களிடம் பேசுவதைத் தவிர்க்கவும்.
மிதுனம் எதிரிகள் விலகிச் செல்லும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய தகவல் தருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
கடகம் ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும். ஆரம்பத்தில் அச்சமூட்டிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
சிம்மம் நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். சுறுசுறுப்புடன் பணிபுரிந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி வாய்ப்புகள் தேடி வரும் நாள். வரவு திருப்தி தரும். ஆடை, ஆபரணப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.
துலாம் தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
விருச்சிகம் வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும்.
தனுசு கூடயிருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகும் நாள். மறதி அதிகரிக்கும். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடலாம்.
மகரம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.
கும்பம் வளர்ச்சி கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
மீனம் கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் வளர்ச்சிக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை