Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

பாராசிட்டமால் ஐஸ்கிரீம்!

உணவுத் துறையில் புதுமையான முயற்சியாக, நெதர்லாந்தில் பாராசிட்டமால் மருந்து கலக்கப்பட்ட ஐஸ்கிரீம் விற்பனைக்கு வந்துள்ளது. கசப்புத் தன்மையுள்ள மாத்திரைகளை விழுங்க விரும்பாதவர்கள் மற்றும் குழந்தைகள் குறித்த கவலைக்கேற்ப, இந்த ஐஸ்கிரீம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவலி, லேசான உடல்வலி மற்றும் காய்ச்சல் போன்ற சிறிய உடல்நலக் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த ஐஸ்கிரீம் பயன்படக்கூடும் என கூறப்படுகிறது. உணவுடன் மருந்து சேர்க்கும் இந்த புதிய அணுகுமுறை, சுகாதாரத்துறையிலும் உணவுத் தொழில்நுட்பத்திலும் புதுமையான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இதே நேரத்தில், இந்த முயற்சியால் மருந்துப் பொருட்களின் தவறான பயன்பாடு, அளவுக்கு மீறிய உட்கொள்ளல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடியதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சட்ட மற்றும் சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை