அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்காக கையொப்பமிடப்பட்ட உலகக் கோப்பை ஜெர்சியை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.
மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மெஸ்ஸி அர்ஜென்டினா அணியின் கேப்டனாகவும், உலகக் கோப்பையை வென்றவராகவும் திகழ்கிறார்.
