அவுஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மைதானத்தில் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி தோல்வியைச் சந்திக்காத நிலையில், முதல் போட்டியின் தோல்விக்குப் பதிலடி கொடுத்துத் தொடரைச் சமன் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி
அடிலெய்டு மைதானத்தில் இதுவரை 5 சதங்களுடன் 975 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி, கடந்த போட்டியில் டக் அவுட் ஆனதற்குப் பதிலடியாக இன்றைய போட்டியில் பெரிய அளவில் ரன்களைக் குவிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதமாக, இன்றைய போட்டியிலும் அவர் 4 பந்துகளைச் சந்தித்து டக் அவுட் (0) ஆகி வெளியேறினார்.
கோலியின் கரியரில் முதல்முறை
விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில், ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறையாகும். இந்த மோசமான நிகழ்வு கோலியின் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடிலெய்டில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி, இந்தச் செய்தி தயாரிக்கப்படும்போது 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
