இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த “இந்தியன் 2” திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.
இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அதன் முடிவில் இடம்பெற்ற “இந்தியன் 3” திரைப்படத்தின் டிரெய்லரும் சர்ச்சைக்குள்ளானது.
இந்த எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக “இந்தியன் 3” திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதாக செய்திகள் பரவின.
இந்நிலையில், தற்போது “இந்தியன் 3” திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால், “இந்தியன் 3” படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
மேலும், இந்தப் படத்திலிருந்து லைகா நிறுவனமும், Netflix நிறுவனமும் பின்வாங்கியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
