Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

சௌந்தர்யா மரணத்தில் மீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொலை என சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சௌந்தர்யா பயணித்த அதே ஹெலிகாப்டரில் தானும் பயணித்திருக்க வேண்டியவர் என நடிகை மீனா பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.

சௌந்தர்யாவின் மறைவுச் செய்தி கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் நடந்த பிரச்சாரத்திற்கு சௌந்தர்யாவுடன் வருமாறு தன்னையும் அழைத்ததாகவும் மீனா தெரிவித்தார்.

ஆனால் சூழ்நிலை காரணமாக அதனை தவிர்த்து விட்டதாகவும் நடிகை மீனா கூறினார்.

நடிகை சௌந்தர்யா கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தார்.

தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு இடையே நிலத்தகராறு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகவும் சில சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர்.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை சௌந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு மறுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை