எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஜன நாயகன்’. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. காரணம், இது நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என்றும், அதன் பின்னர் அவர் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் கூறப்படுகிறது.
இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி, பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி பண்டிகை நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடலுக்கு நடிகர் விஜய் தாமே குரல் கொடுத்துள்ளார் என்பது ரசிகர்களை அதிகம் உற்சாகப்படுத்தியுள்ளது.
